2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வெளிநாட்டில் இருந்து பணத்தைப் பெற்றவர்கள் அதை இரட்டிப்பாக்கினர்

A.P.Mathan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி ஊடாக வெளிநாட்டில் இருந்து பணத்தைப் பெற்ற முப்பத்தி இரண்டு வாடிக்கையாளர்கள் தமக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெறும் அதிர்ஷ்டத்தை அண்மையில் பெற்றனர். இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி இந்தப் பிரிவில் மேற்கொண்ட பிரசார ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் சிலருக்கு இந்தப் பணம் இரட்டிப்பாகவும் வழங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து பணம் பெற வங்கி வழங்கும் நான்கு சேவைகளுள் ஏதாவது ஒன்றை பயன்படுத்துகின்றவர்கள் இந்த ஊக்குவிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வங்கியின் ஈ எக்ஸ்சேன்ஜ், மணிகிராம், றியா, எக்ஸ்பிரஸ் மணி இவையே அந்த நான்கு சேவைகளாகும். படத்தில் (மேலே) கொமர்ஷல் வங்கியின் ஈ வங்கி பிரிவு பிரதான முகாமையாளர் பிரதீப் பந்து வன்ஸவிடமிருந்து வெற்றிபெற்ற வாடிக்கையாளர்கள் சிலர் பரிசு பெறுவதைக்; காணலாம். (கீழே) ஏல்மோ சூரியாராச்சி – சிரேஷ்ட முகாமையாளர் வங்கியின் கிராண்ட்பாஸ் கிளை, ஜோஸப் ஜெகநாதன் சிரேஷ்ட முகாமையாளர் வங்கியின் கொட்டாஞ்சேனை கிளை ஆகியோர் பரிசுகளை வழங்குவதை காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X