Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
'Beyond Local Strategies to Global Success' எனும் தொனிப்பொருளின் கீழ், வணிக பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு SLIIT வணிக முகாமைத்துவ மாநாடொன்றை தொடர்ச்சியான 9ஆவது தடவையாக SLIIT ஏற்பாடு செய்திருந்தது.
தொழிற்துறை அடிப்படையிலான மாணவர்களுக்குரிய மாநாட்டின் நோக்கம், அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளுக்கு தமது உயர் கல்வியை மேம்படுத்திக் கொள்ள உதவுவதாக அமைந்திருப்பதுடன், தமது உயர் கல்வியை பூர்த்தி செய்த பின்னர், பொருத்தமான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள உதவியாகவும் அமைந்திருக்கும்.
இந்த மாநாடு தொடர்பில் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சந்தன பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், 'வணிக பீட மாணவர்களுக்கான மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். சர்வதேச ரீதியில் வெற்றிகரத்தன்மை என்பது அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. நாம் ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக திகழ வேண்டுமாயின், சர்வதேச ரீதியில் நாம் போட்டிகரத்தன்மைய வாய்ந்தவர்களாக திகழ வேண்டும். சர்வதேச கொள்கைகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும். வணிக பீடம் மற்றும் SLIIT ஆகியன இணைந்து சர்வதேச ரீதியில் போட்டிகரத்தன்மை வாய்ந்த மாணவர்களை தயார்ப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி கற்கை நெறிகளை வழங்கி வருகிறது. இதற்காக உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்துள்ளது. துறைசார்ந்த தலைவர்களுடன் தொடர்ச்சியான செயலமர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது' என குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 2007/ 2008 காலப்பகுதிக்கான தலைவர் மஹேந்திர அமரசூரிய கலந்து கொண்டிருந்தார். இவர் பிரதான உரையை நிகழ்த்தியிருந்தார். சிறப்பு அதிதியாக E-W இன்ஃபோர்மேஷன் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ விக்ரமநாயக்க கலந்து கொண்டிருந்தார். அத்துடன், மிலேனியம் இன்ஃபோர்மேஷன் டெக்னொலஜிஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் உப தலைவர் ஃபெரோஸ் காதரும் பங்கேற்றிருந்தார்.
SLIIT இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர். லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 'Reaching beyond local strategies to global success என்பது பெருமளவு மாற்றத்தை எதிர் கொண்டுள்ள இன்றைய வணிக சூழலுக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது. பெரும் மதிப்புக்குரிய துறைசார்ந்த நிபுணர்கள், இதர பிரதானிகளை சந்திப்பதற்கான வாய்ப்பையும் இந்த மாநாடு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. SLIITஇல் பயிலும் எமது மாணவர்களின் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மாநாடுகள் அமைந்துள்ளன' என்றார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், பெருமளவான வினாக்களுக்கும் விடையளித்திருந்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago