Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
”பிளெமிங்கோ தீர்வையற்ற விற்பனை நிலையமானது, அதன் வர்த்தக நிலையத்ைத இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பித்துள்ளது” என்று பிளெமிங்கோ டியூட்டி ஃபிறீ இலங்கையின் பிரதம நிறைவேற்றதிகாரியான
பி.கே திமாயா, இது தொடர்பில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார். பிளெமிங்கோ டியூட்டி ஃபிறீ முக்கிய பிரிவுக்கான ஒப்பந்தத்தை கடந்த மார்ச் மாதம் வென்றது. அத்துடன், புதிய சலுகைக் காலமானது, 2017 மார்ச் மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஐந்து (5) வருடங்களுக்கு செல்லுபடியாகும். புதிய ஒப்பந்தம் கைச்சாத்தானதையடுத்து பிளெமிங்கோ, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படுகை மற்றும் உள்வருகை பகுதிகளில் புதிய இடங்களுக்கு மாறியுள்ளது. இதன் உள்வருகைப் பகுதியில் இருக்கும் விற்பனை நிலையமானது, விஸ்தீரணத்தில் மாற்றம் ஏதுமின்றியிருக்க, புறப்படுகைப் பகுதியில் இருக்கும் விற்பனை நிலையமானது, 5060 சதுர அடிகளாக 65% விஸ்தீரண அதிகரிப்பினைக் கொண்டிருக்கின்றது.
வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி மற்றும் நன்மைகளை வழங்குவதில் தன்னை அர்ப்பணித்துள்ள பிளெமிங்கோவானது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை சகலராலும் விரும்பக்கூடிய ஷொப்பிங் கேந்திர நிலையமாக மாற்றுவதிலும் பாடுபட்டு வருகின்றது என்பதோடு, எல்லா முயற்சிகளையும் தனித்துவமான முறையிலும் மேற்கொள்கின்றது. அவ்வாறானதொரு முயற்சியே பிளெமிங்கோ டியூட்டி பிறீயின் லோயல்டி திட்டமாகும். “பிளெமிங்கோ பிறிவிலெஜ்ஜானது, 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கையின் பயணத்துறை வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 25,000 பேர் லோயல்டி அங்கத்தவர்களாக உள்ளனர். ஒவ்வொரு வாடிக்கையாளரும், அங்கத்தவரும் தான் மேற்கொள்ளும் ஒவ்வோர் கொள்வனவின்போதும் புள்ளிகளைப் பெறுவதோடு அவற்றை மீட்டுக்கொள்ளலாம். ‘பிளெமிங்ககோ ஸ்ரீ லங்கன் எயார்லைன்சின் Flysmiles உடனும் ஒப்பந்தமொன்றினைச் செய்துகொண்டுள்ளது. இது பிளெமிங்கோவின் கொடுக்கல் வாங்கல்களின்போதும் Flysmiles களைச் சம்பாதிக்கும் விசேட ஒப்பந்தமாகும். நாளுக்குநாள் பெருகிவரும் சீன நாட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பிளெமிங்கோவானது, UnionPay உடன் பங்குடமையினை ஏற்படுத்தியுள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago