2024 மே 20, திங்கட்கிழமை

வெலிகடயில் SLT-MOBITEL இன் செயற்பாட்டு தலைமையகம்

Freelancer   / 2023 ஜூன் 09 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனது தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட, உயர் நுட்பத் திறன் படைத்த செயற்பாட்டு தலைமையகத்தை கொழும்பு, வெலிகட பகுதியில் அண்மையில் திறந்துள்ளது.

நவீன உள்ளம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில், நவீன 5G வலயம், மழைநீர் சேகரிப்பு திட்டம், பசுமை வலு, வலு மற்றும் குளிர வைப்பு கட்டமைப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, வலு தரப்படுத்தப்பட்ட கண்ணாடிக் கட்டமைப்பு, வலு தரப்படுத்தப்பட்ட மின் பொருத்துகைகள், மின்னுயர்த்தி, வாயு குளிரூட்டி போன்ற வசதிகள் காணப்படுகின்றன. முதல் கட்டத்தின் கீழ், மொத்தமாக உத்தேசிக்கப்பட்ட 9 மாடிகளில் 5 மாடிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாடிகள் இரண்டாம் கட்டத்தின் போது நிர்மாணிக்கப்படும். நிலைபேறாண்மை தொடர்பில் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு, புதிய தலைமையக கட்டிடம் நிர்மாணப் படிகள் 7 ஏக்கர் காணியின் 3% ஆன பகுதியில் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் பகுதிகள் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிய தலைமையகத்தின் நிர்மாணம் என்பது brown field அபிவிருத்தியாக அமைந்திருப்பதுடன், தகர்க்கப்பட்ட கட்டிடங்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மூலப்பொருட்கள் அனைத்தும் மீளப் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்டிருந்ததனூடாக, ஆகக்குறைந்த கழிவு விரயம் உறுதி செய்யப்பட்டிருந்தது. கட்டிட விருத்தியில் சூழலுக்கு நட்பான கொள்கைகள் உள்வாங்கப்பட்டிருந்தன. மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பு பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சுத்திகரிக்கப்படும் நீரைப் பயன்படுத்தி, கட்டிடத்தின் செங்குத்து தோட்டச் செய்கையில் பயன்படுத்தப்படும். மேலும், கட்டிடத்தின் கூரைப் பகுதியில் 15,000 சதுர அடிப் பகுதியில் சூரியப் படல் கட்டமைப்பு நிறுவப்படும்.

புதிய தலைமையகத்தில் புதிய கட்டிட முகாமைத்துவ கட்டமைப்புகள் காணப்படுவதுடன், வாயு குளிரூட்டி, நீர், ஒளியூட்டல் மற்றும் இதர வசதிகள் போன்றவற்றை கண்காணிக்க முடிவதுடன், அவை தொடர்பில் விழிப்பூட்டக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன மயப்படுத்தப்பட்ட பணியாற்றல் சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு நட்பான சூழலில், திறந்த அலுவலக முறைமைகளும் நிறுவப்பட்டுள்ளன. புதிய நிர்மாணத்துடன் சூழலுக்கு ஆகக் குறைந்த தாக்கம் உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், தசாப்த காலம் பழைமை வாய்ந்த மரா மரமும் கட்டிடத்துடன் பேணப்பட்டுள்ளது. இதனூடாக, கட்டிடத்தின் சூழலில் இயற்கையின் உண்மையான பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டம் 1 க்கான மொத்த செயற்திட்ட செலவு 2500 மில்லியனாக அமைந்திருந்தது. கொவிட்-19, அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பிரயாணக் கட்டுப்பாடுகள் மற்றும் தளம்பல்கள் நிறைந்த அரசியல் சூழல்கள் போன்ற பெருமளவு சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மேற்படி சவால்கள் நிறைந்த சூழலிலும், SLT-Mobitel அணியினால் செயற்திட்டத்தின் திட்டமிடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்திருந்தது.

இந்தப் புதிய கட்டிடத்தில் மொபிடெல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதனூடாக, வருடாந்தம் ரூ. 25.4 மில்லியன் செலவுச் சேமிப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக வாகனத் தரிப்பிட வாடகைகள், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகள், மின்சாரம் மற்றும் நீர் பாவனை, அலுவலகங்களுக்கிடையிலான போக்குவரத்து போன்றவற்றினூடாக இந்த சேமிப்பை எய்தக்கூடியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  மேற்படி விடயங்களுக்கு மேலதிகமாக, ரொட்டுண்டா மற்றும் புரொப்பர்டெக்ஸ் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கான வருடாந்த வாடகைகள் சுமார் ரூ. 250 மில்லியன் ரூபாயாக அமைந்துள்ள நிலையில், புதிய தலைமையகத்துக்கு மாறியுள்ளதனூடாக அந்தத் தொகையும் மீதப்படுத்தப்படும்.

சுமார் 60,000 சதுர அடிப் பரப்பில் எஞ்சியிருக்கும் 4 மாடிகளின் நிர்மாணப் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், அதனூடாக SLT க்கு, SLT-Mobitel இன் செயற்பாடுகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரக்கூடியதாக இருக்கும். இதனூடாக, கொழும்பு, கொம்பனித்தெரு போன்ற வியாபார நெரிசல்கள் நிறைந்த பகுதிகளில் பெருமளவு வியாபார பகுதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கும் என்பதுடன், SLT-Mobitel க்கு வருமானமீட்டக்கூடியதாகவும் இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X