Janu / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), மின்சாரப் பயன்பாடு தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய வழிகாட்டல்களுக்கு அமைய, 'ஸ்மார்ட் சார்ஜிங்' (Smart Charging) முறைகளைக் கடைப்பிடிக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் மின்சாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனாகவும் கையாள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஊக்கப்படுத்துதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான (NEVs) கேள்வி தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், பெரும்பாலானோர் மாற்றுப் போக்குவரத்துத் தீர்வுகளை நாடத் தொடங்கியுள்ளனர். அதேவேளை, மின்சாரத் தடைகள் குறித்து நாடு கொண்டுள்ள கடந்தகால அனுபவங்கள், இந்த மாற்றக்கட்டத்தை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
அண்மையில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வும் இத்தேவையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. எனவே, புதிய சக்தி வாகனங்களின் அதிகரித்து வரும் பயன்பாடானது, பொறுப்பான மின்சாரப் பயன்பாடு மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் இணைந்ததாக இருப்பதை உறுதி செய்வது மிக அவசியமாகும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் செலவிடும் தொகையுடன் ஒப்பிடுகையில், மின்சார வாகனத்தை சார்ஜிங் செய்வதற்கான செலவு மிகக் குறைவானது என்பதுடன், பராமரிப்புத் தேவைகளும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால், வாகன உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பெருமளவு பணத்தைச் சேமிக்க முடியும். இலங்கை தற்போதைய எரிசக்தி சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அனைத்து BYD மற்றும் DENZA வாகனங்களிலும் உள்ள 'ஸ்மார்ட் சார்ஜிங்' வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு JKCG Auto தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறது.
JKCG Auto வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 7kW மற்றும் 2.5kW கொள்ளளவு கொண்ட வீட்டிலேயே மின்னேற்றக்கூடிய (At-home chargers) சாதனங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றிலுள்ள 'ஸ்மார்ட் செட்யூலிங்' (Smart scheduling) எனப்படும் புத்திசாலித்தனமான நேரக்கட்டுப்பாட்டு வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் மின்சாரத் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தமக்கு உகந்த நேரங்களில் வாகனங்களை சார்ஜிங் செய்துகொள்ள முடியும்.
இது குறித்து JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிகரத்ன கருத்துத் தெரிவிக்கையில்:
“தங்களது BYD மற்றும் DENZA வாகனங்களில் உள்ள 'ஸ்மார்ட்' அல்லது 'திட்டமிடப்பட்ட சார்ஜிங்' (Scheduled charging) போன்ற புத்திசாலித்தனமான தொழில்நுட்ப வசதிகளை எமது வாடிக்கையாளர்கள் முழுமையாகப் பயன்படுத்துமாறு நாம் ஊக்குவிக்கின்றோம். இந்த வசதியின் மூலம், வாகனங்களை மின்சாரத்துடன் இணைத்தவுடன் சார்ஜிங் செய்யத் தொடங்காமல், தமக்குத் தேவையான அல்லது மின்சாரத் தேவை குறைவாக உள்ள ஒரு குறிப்பிட்ட நேரத்தை முன்கூட்டியே நிரல் (Program) செய்து சார்ஜிங் செய்துகொள்ள முடியும்.
இதன்பொருள் என்னவென்றால், ஒரு வாகனம் இரவு முழுவதும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அது மின்தேவை குறைவாக உள்ள நேரங்களில் (Off-peak hours) மாத்திரமே மின்சாரத்தைப் பயன்படுத்தும். இது மின்சாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், குறைந்த மின்சாரக் கட்டணத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் நன்மையடையவும் வழிவகுக்கிறது.”
இந்த ஸ்மார்ட் சார்ஜிங் நடைமுறைகளானது, மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் காலப்பகுதிகளுடன் வாகன சார்ஜிங்கை ஒருங்கமைக்க உதவுகின்றது. அதேவேளை, வீடுகளில் சூரிய சக்திக் கட்டமைப்புகளைக் (Solar panels) கொண்டுள்ளவர்கள், சூரிய சக்தி தாராளமாகக் கிடைக்கும் நேரங்களில் தமது வாகனங்களை சார்ஜிங் செய்வதன் மூலம் அதன் பலனை உச்சகட்டமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி, மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் மாலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையிலான காலப்பகுதியில் வாகனங்களை சார்ஜிங் செய்வதைத் தவிர்க்குமாறு பயனாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாட்டில் புதிய சக்தி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இலங்கையின் மின்சாரத் தேவைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதிகளின் தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு முயற்சிகள் ஆகியவற்றின் ஊடாக, இந்த மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை JKCG Auto மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .