2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எஸ்எம்பிஆர் குளோபல் ஏவியேஷன் விருது

Editorial   / 2022 ஒக்டோபர் 31 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எஸ்எம்பிஆர் குளோபல் ஏவியேஷன் விருது (SMBR Global Aviation Awards) வழங்கும் நிகழ்வில் மிகச் சிறந்த விமான நிலைத்தன்மை நிகழ்ச்சித்திட்ட விருதை வென்றது

 சமீபத்தில் முடிவடைந்த, தனது உயரிய மீள்சுழற்சித் திட்டமான 'மதக' (Mathaka)  நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் (SMBR)  குளோபல் ஏவியேஷன் விருது வழங்கும் நிகழ்வில் 118 சமர்ப்பணங்களை முறியடித்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மதிப்புமிக்க சிறந்த விமான நிலைத்தன்மை நிகழ்ச்சித்திட்ட விருதை வென்றது. மதக (Mathaka)  நிகழ்ச்சித் திட்டம் என்பது விமானத்தின் கழிவுப் பொருட்களை பல்வேறு வாழ்க்கை முறைத் தயாரிப்புகளாக மீண்டும் உருவாக்குவதன் மூலம் நிலக்கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் தடம் ஆகியவற்றில் அதன் பங்களிப்பைக் குறைத்தல் என்பதே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பதிலாக அமைந்தது.

பயணப் பைகள், பணப் பைகள், புத்தகங்கள், கீ டெக்குகள் (key tags)  மற்றும் நகைகள்  உட்பட 'மதக' (Mathaka)  வர்த்தக நாமத்தின் கீழ் பிரத்தியேகமான தயாரிப்புகளை விருத்தி செய்வதற்காக, உயர் மீள்சுழற்சி செய்யப்பட்ட வாழ்க்கை முறை தயாரிப்புகளை வடிவமைத்து உற்பத்தி செயயும் இலங்கை நிறுவனமான ஹவுஸ் ஒப் லொனாலி (House of Lonali)  உடன் ஸ்ரீலங்கன் கூட்டிணைந்துள்ளது. முற்றிலும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விமானச் சீருடைகள், விமானத்தின் உட்புறக் கூறுகள் மற்றும் ஏனைய பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள், இறுதியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானங்களிலும் ஹவுஸ் ஒப் லொனாலி (House of Lonali) யின் இணையதளம் மற்றும் சில்லறை பங்குதாரர்கள் மூலமாகவும் விற்பனைக்காக அறிமுகம் செய்து வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் விமான நிறுவனத்தின் ஏனைய குழுமம்சார் நிலைபேற்றுத்தன்மை வாய்ந்த நடவடிக்கைகளுக்காக நிதியுதவியாக வழங்கப்படும்.

கழிவுப் பொருட்களை புதிய தயாரிப்புகளாக மாற்றுவதன் மூலம் நிலக்கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதன் ஊடாக இவ்விமான நிறுவனத்தின் கிரக நட்புறவு நிறுவனத் தத்துவத்தை ஒரு படி மேலே கொண்டு செல்ல இத்திட்டம் வழிவகுக்கின்றது. மேலும் கழிவுப் பொருட்களின் பயன்பாட்டை நிலைத்தன்மையான முறையில் விரிவுபடுத்துவதன் மூலம், பொருளாதார பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் உயர் மீள்சுழற்சி மூலம் பயனுறுதிவாய்ந்த கழிவுப்பொருள் முகாமைத்துவம்  ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை வழங்குகிறது.

இதற்கும் மேலாக, ஸ்ரீலங்கன் தனது நிகழ்ச்சித்திட்ட பங்காளியான ஹவுஸ் ஒப் லொனாலி (House of Lonali)  ஊடாக பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், இது குறைந்த வருமானம் ஈட்டும் சமூகங்களைச் சேர்ந்த திறமையான பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு சமூக தொழில் முனைவு முயற்சியாகவும் காணப்படுகின்றது. மதக திட்டத்தின் (Project Mathaka)) உற்பத்திச் செயன்முறை ஊடாக ஹவுஸ் ஒப் லொனாலி (House of Lonali) யில் பணியமர்த்தப்பட்ட நபர்கள் சர்வதேச அளவில் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் அதே நேரத்தில் வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்கவும் அதிகாரம் அளிக்கப்படுவார்கள்.

எஸ்எம்பிஆர் குளோபல் ஏவியேஷன் விருதுகள் (SMBR Global Aviation Awards),  கனடாவின் மாண்ட்ரீல் (Montreal) இல் இடம்பெற்ற சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (ICAO) 41 ஆவது பொதுச் சபையில் வழங்கப்பட்டன. 2016 இல் நிறுவப்பட்ட எஸ்எம்பிஆர் குளோபல் ஏவியேஷன் விருதுகள் (SMBR Global Aviation Awards) உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையின் வெற்றிக்கு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கிய பங்களிப்புக்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மதிப்பீட்டுச் செயன்முறை மற்றும் வெற்றியாளர் தெரிவு ஆகியன சர்வதேச மூலோபாய பங்காளிகள் குழுவினரால் வழிநடாத்தப்படுகின்றன.

மதக திட்டம் (Project Mathaka) என்பது சுற்றுச் சூழலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக வாதிடுவதற்காக விமான நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விவகாரங்கள் மற்றும் நிலைபேற்றுத்தன்மை குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஸ்ரீலங்கன், 2009 ஆம் ஆண்டு மீளவும் 'கிரக நட்புறவு விமானங்களை' (Planet Friendly Flights) அறிமுகப்படுத்திய ஆசியாவின் முதல் விமான நிறுவனமாக இருப்பதுடன், 2016 ஆம் ஆண்டில், பிசினஸ் டிராவலர் (Business Traveller) ஆல் ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாவது குறைந்த கார்பன் (carbon) வாயுவை வெளியிடும் விமான நிறுவனமாகவும் நாமம் சூட்டப்பட்டது.

காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான ஒரே வழி ஒருமித்த மனப்பான்மைகொண்ட பங்காளர்களுடன் ஒத்துழைப்பதும், அதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இருப்பதும் ஆகும். இப்பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்து நிலைபேற்றுத் தன்மைக்கான ஒரு முன்னோடி என்ற வகையில், இவ்விமான நிறுவனம், அதன் சுற்றுச்சூழல் விவகாரங்கள் மற்றும் நிலைபேற்றுத்தன்மை குழு ஊடாக, அதன் மக்களிடையே சூழல் நட்புறவு மனப்பான்மையை உருவாக்க தொடர்ந்தும் முயற்சிக்கின்றது. இச்சமூகம் பெரும்பாலும் விமான நிறுவனத்தின் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றது அத்துடன் இவ்விமான நிறுவனம், நீண்ட காலத்திற்கு நிலைபேற்றுத் தன்மையினைப் பேணும் விடயத்தில் சிறு நடவடிக்கைகள் பாரிய சாதனைக்கு இட்டுச் செல்லும் என நம்புகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .