Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 ஜூன் 12 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மய்யத்தின் (NOCPCO) தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, நிறுவன பிரதிநிதிகளுடன் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது 2020 ஏப்ரல் 1 முதல் மே 28 வரை ஒரு தனிமைப்படுத்தல் நிலையமாக செயல்பட்டு இலங்கையில் COVID -19ஐ எதிர்த்துப் போராடியதற்காக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி கட்டுப்பாட்டில் உள்ள க்ளப் ஹோட்டல் டால்பினை பாராட்டினார்.
இந்த சேவைக்கான அனைத்து இயக்க மற்றும் ஊழியர்; செலவாக ரூ. 6.3 மில்லியன் தொகையை செலவிட்ட ஹேமாஸ் குழுமம், டால்பின் ஹோட்டலுக்கு தனது மனமார்ந்த, ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்க இந்தச் சந்திப்பை இராணுவத் தளபதி கூட்டினார்.
தேசத்துக்கு ஒரு முக்கியமான தருணத்தில் NOCPCOTக்கு வழங்கப்பட்ட பெறுமதியான உதவியை அங்கிகரிப்பதற்காக ஹோட்டலைப் பாராட்டி அவர் எழுதிய கடிதத்தில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, “க்ளப் ஹோட்டல் டால்பினை 2020 ஏப்ரல் 01 முதல் ஆயுதப்படைகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கான ஒரு தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்துவதற்கு வழங்கிய உங்கள் தாராள செயல், COVID -19ஐத் தடுப்பதில் சேவையாற்றிய எங்கள் முன்னணி பணியாளர்களுக்கு புன்னகையுடனும் ஆறுதலுடனும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஒரு சிறந்த ஊக்கமாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.
2020 மே 28 அன்று நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் மொத்தம் 229 பேர் இராணுவத்தின் மேற்பார்வையில் ஹோட்டலில் அவ்வப்போது நிறுத்தப்பட்டனர்.
“தொற்றுநோயின் முக்கியமான ஆரம்ப நாட்களில், முன்வரிசையில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் கடமையின் வரிசையில் கொரோனாவைரஸ் தொற்றுக்குள்ளாகும் ஆபத்தில் இருந்தபோது, ஒரு தனிமைப்படுத்தல் நிலையமாக எங்கள் கதவுகளைத் திறப்பதன் மூலம் தேசத்தின் தேவைக்கு நாங்கள் பங்களிக்க முடியும் என்பதை உடனடியாகக் கண்டோம். இது எங்கள் வணிகத்தை பாதித்திருந்தாலும், இலங்கையில் இவ்வாறு நடந்துகொண்ட ஒரே ஹோட்டல், எங்கள் க்ளப் ஹோட்டல் டால்பின் மட்டுமே.
“எங்கள் ஊழியர்கள் இந்த முயற்சியில் முழு மனதுடன் இணைந்து, எங்களிடம் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டோரின் சூழலை முடிந்தவரை இனிமையாக்குவதற்கு இராணுவத்துடன் இணைந்து பணியாற்றினர்” என்று ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் குழு பணிப்பாளரும், செரண்டிப் ஹோட்டல்களின் தலைவருமான அப்பாஸ் ஏசுஃபலி கூறினார்.
ஒரு சிறந்த உள்ளூர் குழும நிறுவனமாக, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி தொடர்ந்து நாட்டின் ஆரோக்கியம், நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது, மேலும் COVID -19 தொற்றுநோயை எதிர்த்து போராட தேசத்துக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
முன்வரிசை பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கிய இரண்டு மாதங்களில், சமையல், பராமரிப்பு, அடிப்படை தேவை சேவைகள் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகள் ஹோட்டலின் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டன. 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினமும் ஹோட்டலின் பராமரிப்பு சேவைகள், ஆயூதப்படைகளால் திட்டமிடப்பட்டு வழங்கப்பட்ட மெனுவின் பிரகாரம் உணவு தயாரிப்பது ஆகிய பணிகளை புரிந்தனர்.
ஹோட்டலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசிய செரண்டிப் ஹோட்டல்களின் நிர்வாக பணிப்பாளர் சாந்த குரும்பலபிடிய கருத்து தெரிவிக்கையில், “கடந்த சில மாதங்களாக தங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்த எங்கள் 280 ஊழியர்களின் தொடர்ச்சியான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
எனவே, COVID -19 பணிக்குழுவின் மேற்பார்வையின் கீழ் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் இலங்கையர்களுக்கு, கட்டணம் அறவிடும் தனிமைப்படுத்தல் நிலையமாக தொடர அரசாங்கம் விடுத்த அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025