2025 ஜூலை 26, சனிக்கிழமை

கொள்ளையில் ஈடுபட்ட நால்வருக்கு 20 வருட சிறைத் தண்டனை

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை 20 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.

வவுனியாவில் 2006ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரனையின்போது இவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.

இதனால் குறித்த நால்வருக்கும் தலா 20 வருடம் சிறைத் தண்டனையினை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் விதித்தார். 2006ஆம் ஆண்டு காலப் பகுதியில் வவுனியாவில் தினமும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X