Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று, வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினால், மக்கள் பிரதிநிதிகளிடம் நேற்று வியாழக்கிழமை (15) கையளிக்கப்பட்டது.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில், வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற வடமாகாண மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வின் போதே, இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையிலும் வடபகுதி மீனவர்கள் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வகையில், சட்டவிரோத மீன்பிடி முறை, இந்திய மீனவர்களின் ஊடுருவல், பருவகால மாற்றங்களின் போது, தென் பகுதி மீனவர்களின் வருகை, கடற்படை மீனவர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் மற்றும் அச்சுறுத்துதல், மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், மீனவருக்கான ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட 10 விடயங்களை உள்ளடக்கிய மகஜரே, மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விடயங்களை நாடாளுமன்றம் மற்றும் வடமாகாண சபை ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டு வருமாறும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மகஜர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025