2025 ஜூலை 09, புதன்கிழமை

2016 திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த  2016, ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், அதற்காக கிடைக்கப்பெற்ற நிதியுதவியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவதுடன், நடப்பாண்டில், முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராயும்  கூட்டம் நடைபெறவுள்ளது.       

இக் கூட்டம், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலர்; திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின்  நன்மைகள், தீமைகள்    தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு ஆய்வுகள் செய்வதுடன், நடப்பாண்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .