Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2017 ஜனவரி 06 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பூர்வீக இடங்களை துண்டுப்போடுவதற்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துண்டுப் பிரசுரங்கள், கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் நேற்று இரவுவேளை இனம்தெரியாத நபர்களினால் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் தலைமைகளை எச்சரித்து இந்த துண்டுபிர்சுரம் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை நேற்று மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டியிருந்தனர்.
எனினும், மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறை அமைக்கும் பணிகள் பொலிஸாரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த துண்டுபிரசுரம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளமையினால் அங்கு ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago