Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எமது சமூகம் நடந்துகொள்ள வேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளாா்.
கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற, பேராதனை பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவன் செந்தூரனின் யாதுமாகி கவிதை நூல் அறிமுகவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
இங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நிகழ்வில் நான் ஒரு மாற்றுத்திறனாளியாகவே வந்திருக்கின்றேன். அண்மையில் பங்களாதேஷுக்குச் சென்றிருந்தேன்.
அங்கு, அந்த நாட்டின் விடுதலைக்காக தம்மை குடும்பத்தோடு அா்ப்பணித்த முஜிபூா் ரகுமான், என்பவரின் நினைவுகளை பேணுவதற்காக அவர்கள், சுட்டுக்கொலை செய்யப்பட்ட அந்த இடத்தை மாளிக்கையாக மாற்றி, அவா்கள் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள், பயன்படுத்திய சமையல் பாத்திரங்கள், சுடப்பட்ட தோட்டாக்கள் என எல்லாவற்றையும் கண்ணாடி பெட்டிக்குள் கௌரமாக. உணா்வோடு பேணி பாதுகாத்து வைத்திரு்கின்றாா்கள்.
ஆனால் தமிழர்கள், எல்லா சின்னங்களை தொலைத்து விட்டு இருக்கின்றாா்கள். செந்தூரன் போன்று தனது தந்தையை இந்த மண்ணுக்காக அா்ப்பணித்த ஒருவரின் உணா்வோடு வெளிவருகின்ற இந்த கவிதைகள்தான் எஞ்சியிருக்கின்றன.
ஆனால், இவ்வாறான நிகழ்வுகளுக்கு எம்மவா்கள் கொடுக்கின்ற மதிப்பை பார்க்கின்ற போது மிகவும் மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
“மாற்றுத்திறனாளிகள் தாங்களாக விரும்பி இவ்வாறு தங்களை மாற்றிக்கொண்டவா்கள் அல்ல. இந்த நாட்டுக்காக, மக்களின் விடிவுக்காக தங்களை அா்ப்பணித்து இன்று தங்கள் உடல்களில் காலை இழந்து, கையை இழந்து, கண்ணை இழந்து, இடுப்பை இழந்து பல்வேறு கொச்சை சொற்களுடன் விழிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றாா்கள்.
இது மிகவும் மனவருத்தமானது.இந்த நிலைமாறவேண்டும், சமூகத்தின் மனங்கள் மாறவேண்டும். எங்களுடைய மாற்றுத்திறனாளிகளை பகடைகாய்களாக மாற்றி பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றாா்கள்” என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago