Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் உள்ள வீட்டில் இருந்து 60 வயது பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த எட்டு நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டில் தனிமையிலிருந்ததால் பாதிக்கப்பட்டிருந்த பெண், வவுனியா வைத்தியாசாலையில், பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இந்த வீடும், படலையும், கடந்த எட்டு நாட்களாக பூட்டிய நிலையில் இருந்துள்ளதுடன், வீட்டு வளவுக்குள் இருந்த பெண்ணை கண்ட அயலவர்கள் தினம் உணவு கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சனிக்கிழமை முதல், பெண்ணின் நடமாட்டம் இன்மையால் சந்தேகமடைந்த அயலவர்கள், பிரதேச ஊடாகவியலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் வழங்கியுள்ளதுடன் அவர்கள் ஊடாக வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், வீட்டு மதில் ஊடாக உள்நுழைந்து, வீட்டின் கதவைத் திறந்து, அங்கு தள்ளாடியபடி இருந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
இ. செல்வநாயகி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டதுடன் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
பெண்ணின் கணவன் மற்றும் மகன் ஆகிய இருவரும் கடந்த 8 நாட்களாக தனிமையில் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago