2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனம் தனியாரிடம் கையளிக்கப்படமாட்டாது'

George   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றெசேரியன் லெம்பேட்

“மாந்தை உப்பு  உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறாது என்றும் குறித்த உப்பளத்தை அபிவிருத்தி செய்து மேலும்,  அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்” என அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களின் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சரிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்,  இன்று    திங்கட்கிழமை (21)  காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது, வட பகுதியில்   பிரதான வளங்களாக இருக்கின்ற மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையினை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், நேற்று காலை, அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களிடம் மாவட்டச் செயலக நுழைவாயிலில் வைத்து மகஜர் கையளித்தனர்.

குறித்த மகஜர், இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.

இதன்போது, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், இடம்பெற்ற போது இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரை நிகழ்த்தினர்.

“அவசரப்பட்டு மாந்தை உப்பு  உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் நாம் சற்று கலந்தாலோசிக்க வேண்டும். மாகாணத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து நாங்கள் தான் பதிலளிக்க முடியும். அதற்கு எமக்கு இடமளிக்க வேண்டும்.

மத்திய அரசாங்கம், இவ்விடையத்தில் தீர்மானத்தை எடுப்பதினால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் ரிஷாட்டைப் பொறுத்தவரையில் அவர் மாகாணத்துக்கும், மத்திக்கும் உரியவர்.

எனவே, மாந்தை உப்பு  உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தினால் மக்கள், பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே, மாந்தை உப்பு  உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதிலளித்த இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், “மாந்தை உப்பு  உற்பத்தி கூட்டுஸ்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறாது. குறித்த உப்பளத்தை அபிவிருத்திச் செய்து, மேலும் அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .