Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தற்போது நிலவிவரும் வறட்சியால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாவும் இந்நிலமை தொடருமாக இருந்தால் பட்டினிசாவை எதிர்நோக்கவேண்டி வரும் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (03) மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், கால் நடை திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர். இதன்போதே விவசாயிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “சில வருடங்களாக டிசெம்பர் மாதம் மழை பொய்த்துள்ளது. மழையை நம்பி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நாம் தற்போது பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
அதிக கடன் பெற்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டால் தற்போது பயிர்கள் அழிவடைந்து வருகின்றன. இதனால் நாம் முதல் தொகையை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பாரிய, நடுத்தர, சிறிய குளங்கள் மற்றும் மானாவாரி செய்கை என்பவற்றின் மூலம் பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்ட மொத்தமாக 59 ஆயிரம் ஏக்கர் விவசாயிகளும் இம்முறை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மானாவாரி பயிர்ச்செய்கையில் 21 ஆயிரம் ஏக்கரும் மிகுதி 38 ஏக்கரும் குளங்களின் கீழான பயிர்ச்செய்கை நிலங்களும் ஆகும். ஆனால், இம்முறை இரணைமடுக்குளத்திலும் நீர் இன்மையால் குளங்களின் கீழான பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டு விட்டது. பயிர்கள் தற்போது அழிவடைய ஆரம்பித்துள்ளன.
இதனால், எமக்கு நட்டஈடுகளை பெற்றுத்தர வேண்டும். இல்லையேல் நாங்கள் பட்டினிச்சவை எதிர்நோக்க வேண்டிவரும்” என விவசாயிகள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்கொண்டு செல்வதாகவும் நட்டஈட்டுத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025