2025 ஜூலை 26, சனிக்கிழமை

'பின்தங்கிய பிரதேச மக்கள் கல்வியின் மூலம் உயர் நிலைக்கு வரவேண்டும்'

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


பின்தங்கிய பிரதேச மக்கள் கல்வியின் மூலமாக உயர்ந்த நிலைக்கு வளரவேண்டும். கல்வியின் மூலமாகவே தங்களின் பிரதேசத்தையும் முன்னேற்றிக் கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில்; கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இலங்கையிலே இறுதியாக உருவாக்கப்பட்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமே உள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாகவும் இந்த மாவட்டமே உள்ளது. ஆனாலும் கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் கிளிநொச்சி மாவட்டம் துரிதகதியில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த முன்னேற்றத்தை நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X