2025 ஜூலை 26, சனிக்கிழமை

'குடிப்பரம்பலை மாற்ற முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்'

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


'முல்லைத்தீவு மாவட்டத்தில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களையும் நில அபகரிப்பையும் மேற்கொண்டு வருகின்றது' என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கொக்குளாய் பிரதேச சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கொக்குளாய், கொக்குத்தொடுவாய், வெலிஓயா போன்ற பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் பார்வையிடுவதற்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் வியாழக்கிழமை (05) அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இந்த விஜயத்தின்போது கொக்குளாய் பகுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து சிங்களக் குடியேற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அவர்கள் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியுள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் பாரிய  நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இதனால் முல்லைத்தீவு இன்னும் சில ஆண்டுகளில் சிங்கள மாவட்டமாக மாறும் அபாயம் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொக்குளாய் பிரதேசத்தில் குறிப்பிட்ட சில தென்னிலங்கை மீனவர்களுக்கு மட்டுமே தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கடற்தொழில்
சமாசம் அனுமதி வழங்கியுள்ளது.

இங்கு பெருமளவான மீனவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும் பயன்படுத்தி
தொழில்செய்து வருவதால் கடல்வளம் அழிவடையும் நிலையும் காணப்படுகின்றது.
 
அத்தோடு வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் வெலிஓயா பிரதேசத்தில் பெருமளவான சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிவில் சமூக பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X