2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிளிநொச்சியில் ஆசிரியரிடம் வழிப்பறி

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை வழிமறித்து பணம் மற்றும் பொருட்கள் நேற்று (05) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி தர்மபுரம் பிரமந்தனாறு வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவர் பிறிதொரு ஆசிரியரைச் சந்திப்பதற்காக நேற்று (05) இரவு பிரமந்தனாறு சித்திவிநாயகர் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர்கள் சிலர் குறித்த ஆசிரியரினை வழிமறித்தனர்.

தொடர்ந்து, ஆசிரியரின் முகத்தினை கறுப்புத் துணியினால் கட்டிய அவர்கள், ஆசிரியரிடமிருந்த 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, தலைக்கவசம் உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவ்விடத்திற்கு இராணுவத்தினர் வருவதினை அவதானித்த கொள்ளையர்கள் தப்பித் ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக ஆசிரியரால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X