2025 ஜூலை 26, சனிக்கிழமை

மன்னார் பிரதான பாலத்தில் விபத்து

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஆர்.லெம்பேட்
 
மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை பாரஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மன்னார் தல்லாடி பிரதான வீதியூடாக மன்னாரை நேக்கி பயணித்து கொண்டிருந்த பாரஊர்தியே மன்னார் பிரதான பாலப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
குறித்த பாரஊர்தி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாதையிலிருந்து விலகி பள்ளத்திற்கு சென்றுள்ளது. 
 
எனினும் பாதையின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த தூண்களில் இடிபட்டு பாதையில் இருந்து முற்று முழுவதுமாக விலகாமல் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
 
தூண்கள் அமைக்கப்பட்டபடியினால் குறித்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 
 
எனினும் குறித்த விபத்தின் போது, வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X