2025 ஜூலை 26, சனிக்கிழமை

மனித உரிமைகள் தினத்தையொட்டி ஊர்வலம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


மனித உரிமைகள் தினம் நாளைமறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வவுனியாவில் மனித உரிமைகளை வலியுறுத்தி நேற்று சனிக்கிழமை ஊர்வலமொன்று இடம்பெற்றது.

டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும்.

கூமாங்குளம் இளைஞர் கழகம் மற்றும்; சம் வித்த யுத் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த  ஊர்வலம், வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி இளைஞர் சேவைகள் மன்றத்தை சென்றடைந்தது.

இந்த ஊர்வலத்தில் 'மனித உரிமையென்றால் என்ன வரையறை செய்யுங்கள்'; என்ற பதாதைகளும் தாங்கிச் செல்லப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X