2025 ஜூலை 26, சனிக்கிழமை

முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பால் மீன்பிடித் தொழில் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் தொடர்ச்சியாக கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  தற்போது மீன்களுக்கும்  தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவிருந்து  முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பெருங்கடலில் கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதாக  மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது  குடும்பங்கள்  பொருளாதார ரீதியாக  கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த மீனவர்கள்  கூறுகின்றனர்.

மேலும், முல்லைத்தீவில் மீன்களுக்கும்  பெரும் தட்டுப்பாடும் நிலவி வரும் நிலையில் மன்னார் போன்ற பிற மாவட்டங்களிலிருந்தே மீன்கள் முல்லைத்தீவுக்கு விற்பனைக்காக சந்தைக்கு வருவதாகவும் அவ்வாறு வரும் மீன்கள் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் தற்போது  கடல் மீனவத் தொழில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிறுகடல் மீன்கள் தற்பொழுது சந்தையில் விற்பனைக்கு வருவதை அவதானிக்க முடிகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X