2025 ஜூலை 26, சனிக்கிழமை

மகாதேவ ஆச்சிரம சைவச் சிறுவர் இல்லத்திற்கான புதிய கட்டிடம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரம சைவச் சிறுவர் இல்லத்திற்கான  புதிய கட்டிடமொன்று நேற்று சனிக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

யாழ். வர்த்தக சங்கத்திலுள்ள வர்த்தகர்களின் தனிப்பட்ட நிதியுதவியுடனான 23 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

மகாதேவ ஆச்சிரம இல்லத்தின் இட நெருக்கடிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக ஆச்சிரம நிர்வாகத்தினரால் யாழ். வர்த்தக சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.  

மகாதேவ ஆச்சிரமத்தின் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருமான தி.இராசநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ன்ஐயசேகரம், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செ.ஸ்ரீனிவாசன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.  அத்துடன், வர்த்தக சங்க நிர்வாகத்தினர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சிறுவர் நன்னடத்தை வடமாகாணப் பணிப்பாளர் ஆர்.விஸ்வரூபன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X