2025 ஜூலை 26, சனிக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  நீராவிப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

முள்ளியவளை, தண்ணீரூற்று மேற்கைச் சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் நாகலிங்கம் (வயது 52) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மனைவியுடன் முல்லைத்தீவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இவரின் மோட்டார் சைக்கிள், நீராவிப்பிட்டி பிரதான வீதி நடுவில்  படுத்துறங்கிய மாடொன்றின் மீது மோதியுள்ளது.

இதன்போதே இவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தின்போது இவரது மனைவி சிறு காயங்களுக்குள்ளான  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவரது மனைவி சிகிச்சை நேற்று சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X