2025 ஜூலை 26, சனிக்கிழமை

கட்டாக்காலி மாடுகளை பிடிக்க நடவடிக்கை

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  பிரதேசத்திலுள்ள கட்டாக்காலி மாடுகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அண்மைக் காலமாக முள்ளியவளை பொலிஸ் பிரிவுவிலுள்ள கட்டாக்காலி மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதுடன் அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பணிப்புரக்கமைய முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X