2025 ஜூலை 26, சனிக்கிழமை

கடன் தருவதாக கூறி நிதி மோசடி; வவுனியாவில் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா விளக்குவைத்தகுளம் கிராம மக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஓமந்தை பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட விளக்குவைத்தகுளம் கிராம மக்களிடம் 4500 ரூபா வீதம் 20 பேரிடம் பணத்தை பெற்றிருந்த நாகர் இலுப்பைக்குளத்தை சேர்ந்த சந்தேகநபர், அம்மக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி நேற்று (8) சிலரிடம் தொடர்பு கொண்டு 46,100 ரூபாவுடன் ஓமந்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

கடன் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்தவர்களில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து ஓமந்தை பொலிஸ் புலனாய்வாளர்கள் அவ்விடத்துக்கு விரைந்து அவரை கைது செய்து ஓமந்தை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை வவுனியா வடக்கு பிரதேசத்தில் பலரும் கடன் வழங்குவாக தெரிவித்து அங்குள்ள மக்களை ஏமாற்றி வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மாத்திரம் பண வைப்புக்களையும் கடன் விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X