2025 ஜூலை 26, சனிக்கிழமை

வீதியில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்க கூட்டம்

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் அதிபர் இடம்கொடுக்காமையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கலந்தரையடுவதற்காக பாடசாலையின் பழைய மாணவர்களினால் பொதுக்கூட்டமொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான கோரிக்கை பாடசாலை அதிபரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதியும் அதிபரினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

இதற்காக பாடசாலை கட்டிடத்தினை பயன்படுத்துமாறும் தெரிவத்திருந்த நிலையில் கூட்டம் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் பாடசாலையின் வளாகத்திற்குள் பழைய மாணவர்கள் செல்ல முடியாது எனவும் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என அதிபர் அறிவித்துள்ளார்.

எனினும் பழைய மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தல் வழங்கப்பட்டமையினால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலைக்கு வந்திருந்தனர். இதனால் வீதியில் உடனடியாக கொட்டகை அமைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டதாக பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர்எஸ். சோமகாந்தன் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X