2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிளிநொச்சியில் மலேரியா நோயாளி

Kanagaraj   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர் கிளிநொச்சியில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக கிளி.மாவட்ட வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே மலேரியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவருக்கு மலேரியா காய்ச்சல் பீடித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

தங்களின் உடல் நிலையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுகொள்ளுமாறும்
கிளிநொச்சி மக்களிடம் வைத்தியசாலை நிர்வாகம்  கேட்டுக்கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X