2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆரோக்கியபுர பாலம் புனரமைப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய், ஆரோக்கியபுரம் பாலம் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அக்கராயனிலிருந்து வன்னேரிக்குளம் செல்லும் வீதியில் பாலங்குளம் வான்வெள்ளம் பாயும் பகுதியில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. கடந்த வருட இறுதியில் பெய்த மழையில் வெள்ளம் பாய்ந்தமையால் இந்தப் பாலம் பலத்த சேதமடைந்தது.

ஆரோக்கியபுரம் கிராமத்தில் வசிக்கும் 84 குடும்பங்கள் போக்குவரத்துச் செய்வதில் இடர்கள் காணப்பட்டன. இதனைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் இந்த பாலம் புனரமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .