2025 ஜூலை 09, புதன்கிழமை

யானை வெடிக்கு அசராத யானைகள்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய், பழைய முருகண்டிக் கிராமத்துக்குள் யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களமூடாக வழங்கப்பட்ட யானை வெடிகளால் யானைகளைத் துரத்த முடியவில்லை என அந்தக் கிராம மக்கள் கூறினர்.

இதனால் யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

பழைய முருகண்டிக் கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மக்கள் தற்போது சிறுபோக செய்கையை மேற்கொள்வதற்கு தொடங்கியுள்ளனர். மாலை 4 மணியளவில் யானைகள் பயிர் நிலங்களுக்கு வந்து, பயிர்களை நாசம் செய்கின்றனர்.

யானைகளின்  தொல்லைகள் பற்றி; துணுக்காய் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு, அவர் வனஜீவராசி திணைக்களம் ஊடாக யானை வெடிகளைப் பெற்றுந்தந்தார். ஆனால் அவற்றுக்கு யானைகள் பயப்படுவதில்லை என மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .