2025 ஜூலை 09, புதன்கிழமை

'இந்தியாவில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தோர் பதிவுசெய்து கொள்ளவும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இந்தியாவில் கற்கை நெறியை நிறைவு செய்தவர்களை பதிவு செய்துகொள்ளுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரம் கோரியுள்ளது.

இது தொடர்பில் துணை தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள  செய்திக்குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் எந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரியக் கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது குறுகிய காலப் பயிற்சி நெறிகளை (ITEC/TCS) தமது சுயநிதியிடல் மூலமாகவோ அல்லது இந்திய அரசின் புலமைப்பரிசில் மூலமாகவோ மேற்கொண்டவர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கற்றை நெறிகளை நிறைவு செய்தவர்கள் தமது சுயவிபரங்களை, பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தூதரக இணையத்தளத்திலிருந்து (www.cgijaffna.org) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை cgi.jaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது இந்தியத் துணைத்தூதரகம், இல.14, மருதடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு தபால் மூலமாகவோ, 10 மே, 2015க்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .