2025 ஜூலை 09, புதன்கிழமை

'மலேரியா இல்லாத தேசத்தை உருவாக்குவோம்'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மலேரியா இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என கிளிநொச்சி மாவட்ட மலேரியாத்தடை இயக்கத்துக்குப் பொறுப்பான வைத்தியதிகாரி எம்.ஜெயராசா, புதன்கிழமை (22) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பொதுமக்கள் பொலிஸ் தொடர்பாடல் அலுவலகத்தில் பொதுமக்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மகேந்திராவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
 
கடந்த  1998ஆம் ஆண்டு காலத்தில் மலேரியாவின் தாக்கம் இலங்கையில் அதிகளவிலே காணப்பட்டது. 2017ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா இல்லாத தேசமாக சான்றிதழை பெற வேண்டியுள்ளது.
 
கிளிநொச்சி மாவட்டத்தை மலேரியா அற்ற ஒரு மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகள் பாதிப்பு, முதியோர்கள் பாதிப்பு மற்றும் இளவயது கர்ப்பம் தரித்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இங்குள்ளன. இவற்றில் 5 சதவீதமான பிரச்சினைகளே வெளியில் தெரியவருகின்றன. மிகுதி 95 சதவீதமான பிரச்சினைகள் மறைந்திருக்கின்றன.
 
மக்கள் மத்தியில் சேவையாற்றுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து உள, சமூகப் பிரச்சினைகளை சரியான வழியில் கையாள வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .