2025 ஜூலை 09, புதன்கிழமை

எதிர்காலத்தில் கிளிநொச்சி முன்னேறவேண்டும்: எஸ்.சத்தியசீலன்

George   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்றோ அல்லது புதிதாக மீள்குடியேறிய பகுதியொன்றோ இனிவரும் காலங்களில் கூறிக்கொண்;டிருக்காமல் ஏனைய மாவட்டங்களைப் போன்று  கிளிநொச்சி மாவட்டமும் முன்னேற்றம் அடைய வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
 
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற பெண்கள், சிறுவர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
 
கிளிநொச்சி மாவட்டத்தில் இள வயது கர்ப்பம் தரித்தல், பாடசாலை இடைவிலகல், சிறுவர் இல்லங்களில் அதிகளவான சிறுவர்கள் இணைந்து கொள்ளல் போன்றவை அதிகமாக காணப்படுகின்றன. அவற்றை நீக்குவதற்கான பல்வேறு வழிவகைகள் செய்யப்படவேண்டும்
 
கிளிநொச்சி மாவட்டம், மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 6 ஆண்டுகளாகியும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி  அல்லது  புதிதாக மீள்குடியேறிய பகுதி என்று கூற முடியாது. இனிவரும் நாட்களில் அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து சேவையாற்ற வேண்;டும். இதன் மூலம் தான் ஏனைய மாவட்டங்;களைப் போன்று  அபிவிருத்தி பாதையை நோக்கி நாங்கள் முன்னேற வேண்டும் என அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .