2025 ஜூலை 09, புதன்கிழமை

எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 23 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் காட்டுப்பகுதியிலிருந்து எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்றை புதன்கிழமை (22) மீட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணினுடையதா அல்லது பெண்ணினுடையதாக என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் காட்டுப்பகுதியிலுள்ள  பதுங்கு குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சடலத்தின் அருகில் தீப்பெட்டி, தீக்குச்சிகள் மற்றும் வெற்றுப் போத்தல்கள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .