2025 ஜூலை 09, புதன்கிழமை

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடக்கில் யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இயங்கமுடியத நிலையில் உள்ள 40 பேருக்கு முதற்கட்டமாக  வடமாகாண சுகாதார புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக நேற்று வியாழக்கிழமை  (23.4) நிதியதவி வழங்கப்பட்டன.

இடுப்புக்கு கீழ் இயங்க முடியாதவர்களுக்கு 1,500 ரூபாய்யும் ழுத்துக்கு கீழ் இயங்க முடியாதவர்களுக்கு மூவாயிரம் ரூபாய்யும்  மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.

வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையமான வைகறையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள், புனர்வாழ்வளித்தல், சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், எம்.பி.நடராஜா, ம.தியாகராஜா, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி இன்பராஜ், பிராந்திய வைத்திய அதிகாரி மகேந்திரன், பிரதேச செயலாளர் கா.உதயராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .