2025 ஜூலை 09, புதன்கிழமை

வவுனியா வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை

Kogilavani   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகர்ப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார பிரிவினரால் திடீர்  சோனை வியாழக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார மற்றும் உணவு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்திடீர் பரிசோதனையின்போது, பல வர்த்தக நிலையங்களில் பாவனைக்குதவாத பொருட்கள் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உணவுப்பொருட்கள் கையாளப்படும் விதம் தொடர்பிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை உணவு கையாளும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு நோய் தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடும் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .