Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி கடலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 5 பேருக்கு தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் பூநகரி பொலிஸாருடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 5 மீனவர்கள் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களின் வலைகளை எரிக்குமாறு நீதவான் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025