Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 24 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 7,500 ரூபாய் அபராதம் விதித்துடன், அவர்களுடைய சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒருவருட காலத்துக்கு இடைநிறுத்தி வைத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன், வியாழக்கிழமை (23) தீர்ப்பளித்தார்.
கிளிநொச்சி நகர்ப் பகுதியில் மதுபோதையில் முச்சக்கரவண்டி செலுத்திய ஒருவரையும் பூநகரிப்பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய ஒருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
சட்டவிரோத மதுவுக்கு அபராதம்
கிளிநொச்சியில் கசிப்பு வைத்திருந்தமை மற்றும் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 4 நபர்களுக்கு 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் தீர்ப்பளித்தார்.
வட்டக்கச்சிப் பகுதியில் 3 போத்தல் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1 இலட்சம் ரூபாயும், இராமநாதபுரம் பகுதியில் 5 போத்தல் கசிப்பு வைத்;திருந்த ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாயும், கிளிநொச்சி நகர்ப் பகுதியில் 1 லீற்றர் கசிப்பு வைத்திருந்தவருக்கு 75 ஆயிரம் ரூபாயும், முழங்காவில் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தவருக்கு 30 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
கள் வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
கிளிநொச்சியில் மேலதிகமாக கள் வைத்திருந்தமை மற்றும் அனுமதியின்றி கள் விற்பனை செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் தீர்ப்பளித்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மது வரித்திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் மேலதிகமாக கள் உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக கைது செய்த 8 பேருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு வியாழக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்டவர்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025