2025 ஜூலை 09, புதன்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2015 ஏப்ரல் 24 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களை தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் குடும்பங்களுக்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட தையல் இயந்திரங்கள் இன்று வெள்ளிக்கிழமை(24) வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும்,மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் குடும்ப பெண்கள் 16 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறித்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார்,உதவி பிரதேசச் செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு,கிராம அலுவலகர்களுக்கான நிர்வாக அலுவலகர் ராதா பெர்ணான்டோ,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் ,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் ஜெரோம் ஆகியோர் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .