2025 ஜூலை 09, புதன்கிழமை

வடமாகாண சுகாதார அமைச்சர் இரு வைத்தியசாலைகளுக்கு விஜயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் முருங்கன் மற்றும் அடம்பன் ஆகிய இரு  வைத்தியசாலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் வெள்ளிக்கிழமை (24) குறித்த இரு வைத்தியசாலைகளுக்கும் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

முதலில் முருங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் வைத்தியசாலை பணியாளர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்டதோடு வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு உடனடியாக அவசர தேவைகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து அடம்பன் வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் அடம்பன் வைத்தியசாலையின் வைத்தியர் கே.அரவிந்தனை சந்தித்து வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

இதன்போது, அடம்பன் வைத்தியசாலைக்கு, வடமாகாண வீதி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனும் வருகை தந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை மற்றும் நோயாளர் விடுதிகளை சுற்றிப்பார்த்து தேவையான உதவிகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.

சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்துடன் வடமாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா, தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .