2025 ஜூலை 09, புதன்கிழமை

மீனவர் கலந்துரையாடல்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடல், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தில் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தலைமையில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஏ.யேசுதாசன், மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக்ற் குரூஸ், யாழ் மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகன் ஆகியோர் கலந்துகொண்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயகத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஏ.யேசுதாசன்,

அண்மையில், வடக்கு மாகாண முதலமைச்சரை நாம் சந்தித்து, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்தரையாடினோம்.

வடமாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக அவ்வவ்மாவட்டங்களுக்குச் சென்று கடற்றொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்து அறிக்கையிட்டு தருமாறு வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையிலேயே இந்த ஒன்றுகூடல் மூலம் விவரங்களை பெற்றுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .