2025 ஜூலை 09, புதன்கிழமை

முல்லைத்தீவில் சட்ட விரோதமாக கடற்றொழில் ஈடுபட்ட மீனவர்களை வெளியேறுமாறு அறிவிப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் அட்டை, சங்கு, பற்றை வைத்து கணவாய் பிடித்தல் தொழில்களில் ஈடுபடுவதற்கு மன்னாரிலிருந்து வருகை தந்திருந்த ஐந்து குழுவினரை ஞாயிற்றுக்கிழமைக்குள் (26) அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் வெள்ளிக்கிழமை (24) அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை சமாசத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் மற்றும் சாலை கடற்பரப்பில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அனுமதியற்ற முறையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருப்பதாக அப்பகுதியினைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளினால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தலைமையிலான கடற்றொழில் பிரதிநிதிகள் சாலைப்பகுதிக்குச் சென்று சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ள மன்னாரைச் சேர்ந்த ஐந்து கடற்றொழில் குழுவினரை முறையற்ற விதத்தில் தொழிலில் ஈடுபடவேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை, மேற்படி குழுவினரை ஞாயிற்றுக்கிழமைக்குள் குறித்த பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமெனவும் இல்லையெனில் சமாசம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .