2025 ஜூலை 09, புதன்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவுக்கு வழங்குவது தொடர்பான செயலமர்வு

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 3000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவுக்கு புதிய பயனாளிகளை இணைப்பது தொடர்பாகவும்  அத் திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான  செயலமர்வு  கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (27) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனுசா கோகுல பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறுவதாக இருந்த போதும் அங்கு வேறொரு நிகழ்வு நடைபெறுவதால் தற்போது கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்துக்;கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் வட மாகாணத்தின் 34 பிரதேச செயலர் பிரிவிலுள்ள சமூக சேவைகள் அலுவலர்களும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் பிரிவுகளைச் சேர்ந்த 7 பிரதேச செயலகப் பிரிவு சமூக சேவைகள் அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .