2025 ஜூலை 09, புதன்கிழமை

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நூற்றுக்காணக்கான ஆண்களும் பெண்களும் சனிக்கிழமை (25) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் மிக முக்கியமான மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்களில் 200 பணியாளர்களை தவிர ஏனைய 450 பணியாளர்கள் நிதியின்மையால் வேலையில் இருந்து நிறுத்தப்பட போவதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த பணியாளர்கள் நிறுவனத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இருக்கின்ற நிதிக்கமைவாக அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே காலத்தில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மனிதாபிமான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வந்த எங்கள் மீதும் மனிதாபிமானம் காட்டுங்கள் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் குறித்து நிறுவனத்தின் உயரதிகாரிகளின் பதிலை பெற முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .