Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஓட்டுனர், தன்னை பஸ்ஸில் ஏறவேண்டும் என்று கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு செல்ல வேண்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சனிக்கிழமை (25) அதிகாலை 2.45 மணியளவில் மன்னார் அரச பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த பஸ் உடனடியாக மன்னார்சாலையில் இருந்து பயணிகளுடன் தலைமன்னார் வரை செல்வதற்காக காத்திருந்தது. இதன்போது அந்த பஸ்ஸில் நான் பேசாலை செல்வதற்காக ஏறச்சென்றபோது, எங்கே போகவேண்டும் என்று பஸ் ஓட்டுனர் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான் பேசாலை செல்ல வேண்டும் என்று கூறினேன். இந்த பஸ் பேசாலைக்கு செல்லாது என்று பஸ் ஓட்டுனர் என்று தெரிவித்தபோது, இந்த பஸ் தலைமன்னாருக்குத் தானே செல்கின்றது என்று நான் மறுபடியும் கேட்டேன்.
அதற்கு, ஆம் ஆனால் நீங்கள் போக முடியாது என்று தெரிவித்த பஸ் ஓட்டுனர் தனியார் பஸ்ஸில் வருபவர்களை நாங்கள் அரச பஸ்களில் ஏற்றுவதில்லை என்றும் தெரிவித்தார்.
இது அரசாங்கத்துக்கு சொந்தமான பஸ் என்பதால் என்னை ஏற வேண்டாம் என்று உங்களால் கூறமுடியாது என்று நான் ஓட்டுனருக்கு தெரிவித்தேன். எனினும் ஏற்றுவது நாங்கள் தானே, ஆகவே எமக்கு அதனை சொல்ல முடியும் என்று ஓட்டுனர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த பஸ்ஸில் பயணிக்க செய்ய வேண்டும் என தீர்மானிப்பது எமது விருப்பம். அத்துடன் அது எமது அடிப்படை உரிமையாகும். ஒரு தனிப்பட்ட நபர் என்னை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணம் செய்ய முடியாது என தெரிவித்தது எனது அடிப்படை உரிமை மீறப்பட்ட செயலாகும். அத்துடன் ஒரு பெண் என்ற முறையிலும் எனது உரிமை மீறப்பட்டுள்துடன் பாரபட்சமும் காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகாலை 2.45 மணியளவில் நான் பஸ் நிலையத்தில் தனித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் பெண் பயணிகளுக்கு இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் பாதுகாக்கவும் தன்னிச்சையாக செயற்பட்ட குறித்த பஸ் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago