Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 15 பேருக்கு உதவித் தொகையாக மாதாந்தம் 500 ரூபாய் வழங்குவதற்குரிய நிதியை, வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
கரைச்சி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 10 பேரும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 3 பேரும் பளை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 2 பேருமே இவ்விதமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உதவித் தொகையை பெறவுள்ளோர், அருகிலுள்ள தபாலகம் அல்லது உப தபாலகம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கிராமஅலுவலரிடம் சிபாரிசைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
பின்னர் பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அலுவலரிடம் உரிய படிவத்தைப் பெற்று பூரணப்படுத்தி சமர்ப்பிப்பதன் மூலம் இந்தக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago