Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடற்பரப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத மீன்பிடிகளுக்கு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளே முக்கிய காரணமாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இக்குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வருகைதரும்போது அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையெடுப்பதில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் தவறிவிடுகின்றனர்.
குறிப்பாக கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் நாயாற்றுப்பகுதியில் நடைபெறுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடியினை கட்டுப்படுத்தல்,
கடற்றொழில் நீரியியல் வளத்திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸாரும் குறித்த பகுதிகளுக்குச் சென்று நடவடிக்கையெடுப்பது நாயாற்றுப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியினைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் காப்பரண் ஒன்றினை அமைக்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளினால் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அப்போது பொலிஸாரின் பற்றாக்குறை தொடர்பாக தெரிவிக்கப்பட்டு கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கும்போது பொலிஸாரின் உதவியினைப் பெற்றுக்கொள்ளுதல், வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மூலம் தீவிர நடவடிக்கையெடுப்பதெனவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை காரணமாக நாயாற்றுப்பகுதியில் 120க்கு மேற்பட்ட வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதற்கு மாவட்டத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
1 hours ago