Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பிரதேச வைத்தியசாலையாக இருக்கும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம், திங்கட்கிழமை (27) தெரிவித்தது.
யுத்த காலத்துக்கு முன்னர் 3 ½ இலட்சம் மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்த வைத்தியசாலையாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலை காணப்பட்டது.
மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர், தற்போது 40 ஆயிரம் பொதுமக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்கின்றது.
இந்த வைத்தியசாலையில் சத்திரசிகிக்சை கூடம் மற்றும் ஆய்வுகூட வசதிகள் இல்லாமல் இருக்கின்றது. இரத்த பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இந்தப் பகுதி மக்கள் மாஞ்சோலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்குச் செல்கின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு இந்த வைத்தியசாலையில் வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மத்திய சுகாதார அமைச்சும் நடவடிக்கை எடுத்தன.
அதற்கமைய வைத்தியசாலையில் மகப்பேற்று, குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகள் அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டன. தொடர்ந்து ஆண்கள் விடுதி அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
வடமாகாண சுகாதார அமைச்சின் 25 மில்லியன் ரூபாய் நிதியில் சத்திரசிகிச்சை கூடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
வைத்தியசாலை வளாகத்தில் மேலதிக கட்டடங்கள் அமைப்பதற்கான காணி பற்றாக்குறையாக இருக்கின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு புதுக்குடியிருப்பு பரந்தன் (ஏ – 35) வீதியில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் 15 ஏக்கர் காணி புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலதிக கட்டடப் பணிகள் இந்த காணியில் மேற்கொள்ளப்படும் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago