Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் கடந்த 25 வருடகாலமாக பயன்படாமல் இருந்த ஒட்டுச்சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபாயை, வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இலங்கையின் பழமையான தொழிற்பேட்டையில் ஒட்டுச் சுட்டான் தொழிற்சாலை மிகவும் பிரசித்தம் பெற்றதொன்றாக இருந்துவந்தது. யுத்தகாலத்தில் இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகள் முற்றாக ஒடுக்கப்பட்டு, தனது ஊழியர்களும் தமது தொழிலினை இழக்கும் நிலையேற்பட்டது. அதே போல் இதனை நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் தமது வருமானத்தை இழந்தன.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களில் செரமிக் கூட்டுத்தாபனமும் ஒன்றாக இருந்ததனால், இதன் கீழ் இந்த ஒட்டுச்சுட்டான் தொழிற்சாலையும் உள்ளீர்க்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் இதற்கு தேவையான இயந்திரங்களை தருவிக்கும் வகையிலும் இந்த தொழிற்சாலையை மீண்டும் புனரமைத்து பிரதேசத்தில் உள்ள 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் நோக்கிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக இந்த தொழிற்சாலை புனரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு செரமிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு பணிப்புரையை வழங்கியிருந்ததுடன், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை மீள இயக்க வைப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இந்த அடிப்படையில் குறித்த தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (26) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத்; பதியுதீன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago