2025 ஜூலை 09, புதன்கிழமை

கிளிநொச்சி விபத்தில் நால்வர் பலி; இருவர் காயம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் திங்கட்கிழமை (27) ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடக்க முற்பட்ட போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றது. 

காயமடைந்தோர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .