2025 ஜூலை 09, புதன்கிழமை

'மீள்குடியேறிய அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள்'

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிரந்தர வீடுகள் கிடைப்பதற்கான வழிகளைச் செய்வதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் தங்களுக்கான நிரந்தர வீடுகள் இல்லையென திங்கட்கிழமை (27) போராட்டம் நடத்தி மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளித்தனர்.

இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என மாவட்டச் செயலாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நான் புதிதாக பதவியேற்றிருப்பதன் காரணமாக வீடுகள் ஏன் கிடைக்கவில்லை என்பதை   ஆராய வேண்டும். அதற்கான கால அவகாசம் எனக்கு வேண்டும்.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்காவிட்டாலும் புதிய வீட்டுத்திட்டமொன்று கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மீள்குடியேறிய அனைத்து மக்களுக்கும் வீட்டுத்திட்டம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .